அரியர் தேர்வில் ஆல் பாஸ் இன்னும் அறிவிப்பில் எந்த விதி மீறலும் இல்லை தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் அரியர் தேர்வில் அனைவரும் ஆல் பாஸ் என்பதை ஒத்துக் கொள்ள முடியாது என்று யுஜிசி பதில் மனு தாக்கல் செய்திருந்த சூழ்நிலையில் நீதிபதிகள் சத்தியநாராயணா, ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்ற விசாரணையில் தமிழக அரசின் உயர்கல்வித்துறை தாக்கல் செய்த பதில் மனுவில், பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிமீறல்கள் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளது.
மேலும் அனைத்து பல்கலைக்கழகத் துணைவேந்தர்களிடம் ஆலோசித்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்படுகிறது. அதனால் அனைவரும் ஆல் பாஸ் என்ற உத்தரவை பிறப்பித்ததில் எந்தவிதமான விதிமுறைகள் மீறல் இல்லை. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டே அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசின் பதில் மனுவில் தெள்ளத்தெளிவாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.