தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு அரபிக் கடல் பகுதியிலும் மத்திய அரசு கடல் பகுதியிலும் சூறாவளி காற்று 55 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் எவரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.