Categories
தேசிய செய்திகள்

10th..12th மாணவர்களே தயாராகுங்க…. “தேர்வு கட்டாயம்” வெளியான அறிவிப்பு…!!

கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச்சு 23ஆம் தேதி முதல் ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்பட்டு வந்தது. இதன் காரணமாக, பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டு மாணவர்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டிலும், தொடர்ந்து பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைனில் வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில்,

10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறுமா ? என்ற கேள்வி  அனைத்து மாணவர்களின் மத்தியிலும் எழுந்துள்ளது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் சிபிஎஸ்இ யில் படிக்கும்  10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும் அதில் எந்த மாற்றமும் இல்லை.

மாணவர்கள் வீடுகளில் இருந்தபடியே தங்களை தேர்வுகளுக்கு தயார் படுத்திக் கொள்ளுங்கள் என சிபிஎஸ்சி அமைப்பின் நிர்வாக குழுவின் செயலாளர் அனுராக் திரிபாதி அதிரடியாக கூறியுள்ளார். இதனால் சிபிஎஸ்இ மாணவர்கள் தேர்வு எழுத வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர். 

Categories

Tech |