தமிழகத்தில் நீட் உள்ளிட்ட தேர்வுகளால் ஏழை மாணவர்களின் மருத்துவ படிப்பு வெறும் கனவாகவே போய் விடுவதாக பல சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் ஏழை மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்ற பிறகும், மருத்துவ படிப்பை தொடர தனியார் மருத்துவ கல்லூரி கட்டணத்தை குறைத்து நிர்ணியக்க கோரிய மனு மீதான விசாரணையில்,
ஏழ்மை நிலையில் மருத்துவ படிப்பில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களை தத்தெடுத்து கட்டணத்தை ஏற்க பிரபலங்கள், வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள் முன்வர வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. மேலும் வழக்கு குறித்து சுகாதார செயலாளர், மருத்துவ கல்வி இயக்குனர் ஆகியோரும் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.