1916 ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி சி நடேசனால், டிஎம் நாயர் மற்றும் தியாகராய செட்டி ஆகியோரால் தொடங்கப்பட்ட இயக்கம் தான் நீதிக்கட்சி. 1938 இல் பெரியார் தலைவராக பொறுப்பேற்ற பிறகு ஒரு பெரிய சமூக மாற்றம் நீதி கட்சியால் ஏற்பட்டது. 1912ல் மெட்ராஸ் யுனைடெட் லீக், 1913இல் திராவிட சங்கம், 1916இல் நீதிக் கட்சியாக,
1925இல் சுயமரியாதை இயக்கமாக, 1944இல் திராவிடர் கழகமாக, 1949இல் திராவிட முன்னேற்றக் கழகமாக பரிணாமம் பெற்றது தான் திராவிட இயக்கம். ஆரம்ப காலகட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நீதிக் கட்சிக்கு எதிரான முரண்பாடுகள் இன்றளவும் தமிழகத்தில் பல மக்கள் கொண்டிருந்தாலும், தமிழகத்தில் நிகழ்ந்த பல்வேறு சமூக மாற்றத்திற்கு நீதிக்கட்சி தான் காரணம் என்றால் அது மிகையாகாது.
உதாரணத்திற்கு தமிழகத்தில் சாதிய பாகுபாட்டை பெருமளவு குறைத்ததில் நீதிக்கட்சியின் பங்கு பெரியது. இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் பெயருக்கு பின்னால் சாதியை இடும் பழக்கம் இல்லை. நீதி கட்சி ஆரம்பிக்கப்பட்டு பெரியார் அதற்கு பொறுப்பேற்ற பிறகு பெயருக்குப் பின்னால் சாதியை போடும் பழக்கம் குறைக்கப்பட்டு இன்று பெருமளவு தமிழக மக்கள் இந்த பழக்கத்தை பயன்படுத்தவில்லை என்றால் அதற்கு காரணம் நீதி கட்சி தான்.