வாடகை வீட்டில் வசிக்கும் மக்களின் சிரமத்தை போக்க வீட்டு வாடகை சட்டத்தை அரசு புதுப்பித்துள்ளது.
வீட்டு உரிமையாளர்கள் சிலர் அடிக்கடி வாடகையை உயர்த்துவதால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். அந்தத் தொகையை கட்ட முடியாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள். அதனால் வீட்டின் உரிமையாளர் அடிக்கடி வாடகையை உயர்த்துவது உள்ளிட்ட பிரச்சனைகளை கட்டுப்படுத்துவதற்கு வீட்டு வாடகை சட்டத்தை அரசு பிறப்பித்துள்ளது.
அதன்படி இரண்டு மாதங்களுக்கு மேல் அட்வான்ஸ் வாங்க முடியாது. வாடகை ஒப்பந்த நகலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளை புதிய மாதிரி வாடகை ஒப்பந்த சட்டம் 2019ன் கீழ் கட்டாயம் ஆக்கியுள்ளது. அரசின் இந்த சட்டத்தால் வாடகை வீட்டில் வசிக்கும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.