மெட்ரோ இரயிலில் முதல் வகுப்பு பெட்டிகள் பெண்களுக்கான பிரத்யேக பெட்டியாக மாற்றப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னையில் பயணிகளின் வசதிக்கு ஏற்ப மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் பயணிகள் தாங்கள் செல்லும் இடங்களுக்கு விரைந்து செல்ல வசதியாக உள்ளது. இந்த ரயிலில் உள்ள எல்லா வகுப்பு பெட்டிகளிலும் ஆண்கள் மற்றும் பெண்கள் பலரும் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போதைய காலகட்டத்தில் பெண்களுக்கு எதிராக பல்வேறு வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இதை கருத்தில் கொண்டு வரும் திங்கள் முதல் (நவம்பர் 23 ) மெட்ரோ ரயிலில் உள்ள முதல் வகுப்புப் பெட்டிகள் அனைத்தும் மகளிர் மட்டும் பயணிக்கும் பிரத்தியேக பெட்டியாக மாற்றப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த பெட்டிகளில் பெண்கள் தற்போது உள்ள சாதாரண கட்டணத்திலேயே பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.