17 மாத குழந்தை ஒன்று மழைநீர் வடிகாலில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனில் சோமர்செட் என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் உள்ள மழை நீர் வடிகால் குழாயில் தோமஸ் பிரான்ச் ஃப்ளவர் என்ற 17 மாத குழந்தை ஒன்று விழுந்து சுயநினைவின்றி கிடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அக்குழந்தை ஐந்து நாட்களுக்குப் பிறகு உயிரிழந்துள்ளார். ஆனால் இதில் அதிர்ச்சியளிக்கும் தகவல் என்னவென்றால் குழந்தை இருந்ததோ பிரிட்டனில் ஆனால் அவருடைய பெற்றோரான Tayana என்ற குழந்தையின் அம்மாவும், அப்பாவும் கனடாவில் வசித்து வந்துள்ளனர்.
ஆனால் இவர்கள் குழந்தை இறக்கும்போது மருத்துவமனையில் குழந்தையின் பக்கத்தில் இருந்துள்ளனர். அவர்கள் 17 மாத இந்த சின்ன குழந்தையை பிரிட்டனில் உள்ள இன்னொருவரிடம் ஒப்படைத்துவிட்டு ஏன் கனடா சென்றார்கள்? என்று தெரியவில்லை. இந்நிலையில் இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.