கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்திருந்த நிலையில், மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும், அவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் பல தளர்வுகள் அளிக்கப்பட்டன.
இந்நிலையில் இந்தியாவில் டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் தளர்வுகளால் திடீரென கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் டிசம்பர் 1-ஆம் தேதிக்குப் பிறகு நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஆஸ்திரேலியாவில் இன்று முதல் 6 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் மீண்டும் பாதிப்பு அதிகரித்துள்ளதால், முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.