Categories
பல்சுவை

இந்த பாஸ்வேர்ட் வச்சிருக்கீங்களா…. உங்க தகவல திருடிருவாங்க…. உடனே மாத்திருங்க….!!

தகவல்கள் எளிதில் திருடும் படியான மிகவும் எளிமையாக வைக்கப்பட்டிருக்கும் பாஸ்வேர்டு பட்டியல் வெளியாகியுள்ளது.

ஸ்மார்ட் போன்கள் வந்ததிலிருந்து அனைத்துமே டிஜிட்டல் மயமாக மாறிவிட்டது. அதோடு அவற்றிற்கு என்று தனியாக யூசர் நேம் பாஸ்வேர்ட் என அனைவரும் வைத்திருப்போம். இதில் பாஸ்வேர்டுகளை ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாது என்பதற்காக பலரும் மிகவும் எளிமையான பாஸ்வேர்டுகளை வைத்திருப்போம். அது நமக்கு உபயோகப்படுகிறது என்றாலும் நமது தகவல்களை திருட நினைக்கும் ஹக்கர்களுக்கும் மிகவும் உபயோகமான ஒன்றாக அமைந்து விடுகிறது.

பண பரிவர்த்தனை செய்யும் செயலிகளில் எளிமையான பாஸ்வேர்டுகளை நாம் வைப்பதால் பண மோசடி நடக்கிறது. அவ்வகையில் பலராலும் பயன்படுத்தப்படும் எளிமையான பாஸ்வேர்டு பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. உங்கள் பாஸ்வேர்ட் இந்த பட்டியலில் இருந்தால் உடனடியாக பாதுகாப்பு நிறைந்த பாஸ்வேர்டாக அதனை மாற்றிக் கொள்ளுங்கள்.

123456,   123456789,   password,   12345678,   1234567890,   000000,   111111,12345,   123123,   123abc,   monkey,   121212,   iloveyou,   123321,   princess,   987654321,   1234,   password1,   123123123,   sunshine,   pokemon,   11111111,   superman,   love123,   samantha,   football,   222222,        charlie,   888888,   killer,   555555,   babygirl,   computer,   master,   maggie,   hello,   hunter,   love.

Categories

Tech |