Categories
கால் பந்து பல்சுவை விளையாட்டு

“இந்தியன் சூப்பர் லீக்” இந்த முறை 10 இல்ல 11…. அதிகரித்த போட்டிகள்… யாரு சாம்பியன்….?

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் 10 அணிகளுடன் புதிதாக பதினோராவது அணியாக ஈஸ்ட் பெங்கால் இணைந்துள்ளது

கொரோனா தொற்று இந்தியாவில் குறைந்து வரும் நிலையில் ஏழாவது ஐஎஸ்எல் கால்பந்து போட்டி நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டு நாளை முதல் தொடங்க உள்ளது. ஏற்கனவே ஐஎஸ்எல் கால்பந்து விளையாட்டில் 10 அணிகள் இடம் பெற்றிருக்கும் நிலையில் தற்போது ஈஸ்ட் பெங்கால் அணி புதிதாக சேர்ந்துள்ளது. கால்பந்து ரசிகர்களை அதிக அளவு கொண்ட மேற்கு வங்கத்திலிருந்து இரண்டாவது அணியாக ஈஸ்ட் பெங்கால் அடி எடுத்து வைத்துள்ளது. ஏற்கனவே பங்கு பெற்றிருக்கும் அட்லெட்டிகோ டி கொல்கத்தா என்ற அணியுடன் பழமைவாய்ந்த மோகன் பகான் கிளப் சேர்ந்து ஒருங்கிணைந்த அணியாக இம்முறை களமிறங்க இருப்பது கவனிக்கத்தக்கது.

அணியின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்ததை தொடர்ந்து போட்டியின் எண்ணிக்கையும் 95லிருந்து 115 ஆக உயர்ந்துள்ளதை. ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் மூன்று முறை வெற்றி பெற்று சாம்பியனான அட்லெட்டிகோ டி கொல்கத்தா, இரண்டு முறை வெற்றி பெற்று சாம்பியனான சென்னை எப்சி, ஒரு முறை வென்று சாம்பியன் ஆன பெங்களூர், மும்பை, ஒடிசா, கோவா, ஜாம்ஷெட்பூர், வடகிழக்கு யுனைடெட், கேரளா, ஹைதராபாத் மற்றும் புதிதாக இணைந்திருக்கும் ஈஸ்ட் பெங்கால் என 11 அணிகள் விளையாட உள்ளன. ஒவ்வொரு அணியும் 2 முறை மற்ற அணிக்கு எதிராக களமிறங்க வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை புள்ளி பட்டியலில் பிடித்திருக்கும் அணிகள் அரையிறுதிக்கு செல்லும்.

Categories

Tech |