இந்தியன் சூப்பர் லீக் தொடரில் புதிதாக இணைந்திருக்கும் வெளிநாட்டு வீரருடன் சென்னை எஃப்சி அணி ஜாம்ஷெட்பூர் அணிக்கு எதிராக வரும் 24ஆம் தேதி களமிறங்க உள்ளது
கொரோனா அச்சுறுத்தல் குறைந்து இருக்கும் நிலையில் கோவாவில் வைத்து இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் நாளை முதல் நடக்க உள்ளது. இந்த தொடருக்காக முன்னாள் சாம்பியனான சென்னையின் எஃப்சி அணி கடந்த மாதமே கோவாவிற்கு சென்று தங்கள் பயிற்சியை தொடங்கியுள்ளது. இந்த சீசனுக்காக சென்னை அணியில் சிபோவிச் புதிதாக சேர்ந்துள்ளார்.
6.6″ உயரம் கொண்ட சிபோவிச் ப்ரி ட்ரான்ஸ்ஃபர் மூலமாக அணியில் சேர்ந்து இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த சீசனில் விளையாடுவதற்காக சுவாந்தே பனாய், ரீகன் சிங் ஆகிய இருவருக்கு பிறகு மூன்றாவதாக இணைந்துள்ள வெளிநாட்டு வீரர் சிபோவிச் ஆவார். முன்னாள் சாம்பியனான சென்னையின் எஃப்சி அணி ஜாம்ஷெட்பூர் அணியுடன் தனது முதலாவது லீக்கில் வரும் 24ஆம் தேதி மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.