நடிகர் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படத்தின் டீஸர் ,போஸ்டர் பகிர்வதை நிறுத்த வேண்டும் என விலங்குகள் நல வாரியம் படக்குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நடிகர் சிம்பு நடிப்பில் உருவான ‘ஈஸ்வரன்’ திரைப்படத்தின் டீசரும் போஸ்டரும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. படக்குழு வெளியிட்ட மோஷன் போஸ்டரில் சிம்பு கையில் பாம்பு இருப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. இதுகுறித்து விளக்கம் அளித்த படக்குழு அது கிராபிக்ஸில் உருவாக்கப்பட்டது என தெரிவித்தனர். திரைப்படங்களில் விலங்குகளை பயன்படுத்த கட்டாயம் விலங்குகள் நல வாரியத்திடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
அது கிராபிக்ஸில் உருவாக்கப்பட்ட பாம்பாக இருந்தாலும் அனுமதி பெற வேண்டியது கட்டாயம். ஆனால் ஈஸ்வரன் படக்குழுவினர் இந்திய விலங்குகள் நல வாரியத்திடம் அனுமதி பெறாததால் தயாரிப்பு நிறுவனத்திற்கு விலங்குகள் நலவாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில் உடனடியாக இந்த திரைப்படத்தில் டீசர், போஸ்டர் பகிர்வதை நிறுத்த வேண்டும். உரிய அனுமதி பெறாததற்கான காரணத்தை படக்குழு விளக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.