சிவகங்கை மாவட்டம் இடையமேலூர் பகுதிகளில் நீர் பற்றாக்குறையால் மிளகாய் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் ,மங்காம்பட்டி, கூட்டுறவுப்பட்டி போன்ற கிராமங்களில் சுமார் 50 ஏக்கர்களில் மிளகாய் பயிரிடப்பட்டுள்ளது. ஆனால் போதிய தண்ணீர் இல்லாததால் மிளகாய் விளைச்சல் மிகவும் குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர் .