14 வயது சிறுவன் தனது உயரத்திற்கு உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
சீனாவை சேர்ந்த 14 வயது ரெனின் எனும் சிறுவன் 7 அடி 3.02 அங்குலம் வளர்ந்து உலகின் மிக உயரமான இளைஞன் என்று சாதனை புத்தகத்தில் தனது பெயரை பதித்துள்ளார். ரெனின் தனது சிறுவயதில் அளவுக்கதிகமான உயரத்துடன் இருந்தபோது அவரது பெற்றோர் அச்சத்தில் மருத்துவரை அணுகி உள்ளனர். மருத்துவமனையில் பரிசோதனை எடுத்த முடிவுகள் சாதாரணமாகவே இருந்தது. ரெனினின் தந்தை 180 செண்டி மீட்டர் உயரமும், தாய் மற்றும் தாத்தா 190 சென்டிமீட்டர் உயரமும்,
அவரது பாட்டி 175 சென்டிமீட்டர் உயரமும் கொண்டவர்கள் என கின்னஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. ரெனினின் உயரத்திற்காக பள்ளி மற்றும் வீட்டில் அவருக்கு ஏற்றவாறு நாற்காலி மற்றும் மேசைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த கெவின் பிராட்போர்ட் என்பவர் முந்தைய அதிக உயர சாதனையைப் படைத்தவர். அவர் தனது டீனேஜ் வயதில் ரெனினை விட ஐந்து சென்டிமீட்டர் குறைவாக வளர்ந்திருந்தார்.