Categories
மாநில செய்திகள்

டென்ஷனான தமிழக முதல்வர்… நிபுணர் கேட்ட கேள்வி… அப்படி என்ன கேட்டிருப்பாங்க?…!!!

தமிழக முதல்வர் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது நிபுணர் எழுப்பிய வார்த்தையைக் கேட்டு ஆவேசமடைந்து பதிலளித்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் நீட் தேர்வு, மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், 10 முதல் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பற்றி பல கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது நீட் தேர்வில் தமிழக அரசு மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு பற்றி முதல்வர் விளக்கிக் கொண்டிருந்தபோது, ஒரு நிபுணர் நீட் தேர்வுக்கு 7.5 சதவீதம் ஒதுக்கீடு அளித்தது குறித்து தமிழக அரசு பெருமை பேசுகிறது என்று கூறியதைக் கேட்டு முதல்வர் ஆவேசம் அடைந்தார்.

பெருமை என்ற வார்த்தையை சுட்டிக்காட்டி சரியான கேள்வியை கேட்க வேண்டும் என்று கூறிய முதல்வர், “பெருமையை பேசுகிறேன் என்று தவறான வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். நீட் தேர்வு வருவதற்கு முன்பு அரசு பள்ளிகளில் இருந்து எத்தனை பேர் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்தார்கள் என்ற கணக்கு தெரியுமா? பெருமை பேசுகிறேன் என்று சொல்லாதீர்கள். நான் உண்மையாகவே பெருமை கொள்கிறேன். ஏழை எளிய மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காக கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன்” என்று ஆவேசமாக முதல்வர் பதிலளித்தார்.

Categories

Tech |