30க்கும் மேற்பட்ட குரங்குகள் ஒரே இடத்தில் இறந்து கிடந்ததால் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதா என வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மஹாபுபாபாத் மாவட்டம் சனிகபுரம் கிராமத்தின் அருகே உள்ள மலையடிவாரத்தில் 30க்கும் அதிகமான குரங்குகள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வனத்துறை அதிகாரி கூறுகையில், “குரங்குகளை கொன்றது யார் என தெரியவில்லை.
வயலை பாதுகாக்க விவசாயிகள் செய்த செயலா அல்லது வேறு யாரேனும் இந்த செயலை செய்தார்களா என்பது பற்றி விசாரித்து வருகிறோம்” என தெரிவித்தார். குட்டி குரங்கு உட்பட 30க்கும் அதிகமான குரங்குகளின் சடலம் சாக்குப் பைகளில் அடைக்கப்பட்டு சிதைந்த நிலையில் இருந்ததால் பிரேத பரிசோதனை மேற்கொள்ள முடியவில்லை என அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.