ட்ரம்ப் தனது பெயர் உலகளவில் பேசப்படவேண்டும் என்பதற்காக சில விபரீத முடிவுகளை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்துள்ள அதிபர் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேறுவதற்கு இன்னும் இரண்டு மாத காலம் தான் இருக்கிறது. இந்நிலையில் ஜோ பைடன் வெள்ளை மாளிகைக்கு வருவதற்கு முன்னர் ட்ரம்ப் சில வெளியுறவு கொள்கை சிக்கல்கள் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சிக்கல்கள் மூலம் ஜோ பைடனுக்கு வெள்ளை மாளிகையில் நெருக்கடியை ஏற்படுத்துவதே ட்ரம்பின் நோக்கமாக உள்ளது என்று கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது ஈரான் மீது தாக்குதல் தொடுக்க போவதான செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.
அமெரிக்கா ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடத்தினால் தானும் பதில் தாக்குதல் நடத்த தயார் என ஈரான் அறிவித்துள்ளது. மேலும் நியூக்ளியர் ஆப்ஷன் எனப்படும் அணு தாக்குதல் சாத்தியக்கூறுகளை மையப்படுத்தி தாக்குதல் நடத்துவதாக ஈரான் எச்சரித்துள்ளது. இது மாதிரியான ட்ரம்பின் விபரீத முடிவுகளுக்கு காரணம், தான் பதவி இறங்குவதற்கு முன்னர் உலக அரங்கில் தன் பெயர் இறுக்கமாக பதியும் வகையில் சில விபரீதங்களை உருவாக்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதாக தெரிகிறது.