Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஹைதராபாத் அணிக்கு 163 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை!!

மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 162 ரன்கள் குவித்துள்ளது  

ஐ.பி.எல் 51 வது லீக் போட்டியில்மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகிறது. இப்போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை  தேர்வு செய்துள்ளார். இதையடுத்து மும்பை அணியில்  ரோஹித் சர்மாவும், குயிண்டன் டிகாக்கும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

Imageஇருவரும் நல்ல துவக்கம் கொடுத்தனர்.அதன் பிறகு சிறப்பாக விளையாடி வந்த ரோஹித் சர்மா 24 (18) ரன்கள் எடுத்த நிலையில்  கலீல் அகமது பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து சூர்ய குமார் யாதவும், டிகாக்கும் இணைந்து பொறுப்புடன் விளையாடி வந்தனர்.

Image

அதன் பின் சூர்ய குமார் யாதவ் 23 (17) ரன்களில் ஆட்டமிழக்க அதை தொடர்ந்து வந்த எவின் லீவிஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த ஹர்திக் பாண்டியா அதிரடியாக 18 (10) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து பொல்லார்ட்  களமிறங்க, பொறுப்புடன் விளையாடி வந்த   டிகாக் அரைசதம் அடித்தார். கடைசியில் பொல்லார்ட் 9 ரன்னில் ஆட்டமிழந்தார்.

Image

இறுதியில் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 162 ரன்கள் குவித்தது. குயிண்டன் டிகாக் 69 (58) ரன்களுடனும், க்ருனால் பாண்டியா 9 (3) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.  ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக கலீல் அகமது 3 விக்கெட்டுகளும், புவனேஸ்வர் குமார், மொஹம்மது நபி ஆகியோர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து ஹைதராபாத் அணி 163 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கி விளையாடி வருகிறது.

Categories

Tech |