Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து அட்டகாசம்…. கிராம மக்களின் யுக்தி….. தெறித்து ஓடிய குரங்கு கூட்டம்….!!

தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த குரங்குக் கூட்டத்தை மலையடிவார கிராம மக்கள் புலி பொம்மை வைத்து கட்டு படுத்தியுள்ளனர்

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நவமலை பகுதியை சேர்ந்த மலையடிவார கிராம மக்களின் வீடுகளுக்குள் குரங்குகள் புகுந்து அட்டகாசம் செய்வதாக புகார்கள் எழுந்தது. சிலர் இதனை இடையூராக நினைக்கவில்லை என்றாலும் பொதுமக்கள் பலர் தொடர்ந்து வனத்துறையினரிடம் குரங்குகளைப் பிடிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர். இதனால்  புகார்கள் அடிக்கடி வரும் பகுதிகளில் கூண்டு வைத்து வனத்துறையினர் குரங்குகளை பிடித்து வேறு பகுதியில் கொண்டு விட்டனர்.

ஆனாலும் வனப்பகுதியில் சில தினங்களே இருக்கும் குரங்குகள் மீண்டும் குடியிருப்புகளுக்கு வந்து அட்டகாசம் செய்து வந்தனர். தொடர்ந்து அவதிப்பட்டு வந்த கிராம மக்களுக்கு இறுதியாக தீர்வு ஒன்று கிடைத்தது. வீட்டிற்குள்ளும் கடைகளுக்கும் குரங்கு வராமலிருக்க புலி பொம்மையை வாசலில் வைத்தனர். இதனால் புலி வசிக்கும் இடம் என்று குரங்குகள் அந்தப் பகுதிக்கு வர பயந்து சென்றுவிடுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

Categories

Tech |