Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மகனின் முதலாம் ஆண்டு நினைவு தினம்….. 6,00,000 செலவு செய்து….. தந்தையின் நெகிழ்ச்சி செயல்…!!

உயிரிழந்த மகனுக்கு ஆறு அடி உயரத்தில் மெழுகு சிலை செய்த தந்தையின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் பகுதியை சேர்ந்த முருகேசன்-சரஸ்வதி தம்பதியினருக்கு கீதா, சுதா  என இரண்டு மகள்களும் மாரிகணேஷ் என்ற ஒரே மகனும் இருந்துள்ளார். மாரிகணேஷ்க்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். சிறுவயது முதலே ரேஸில் அதிக ஆர்வம் கொண்ட மாரிகணேஷ் தனது புல்லட் பைக்கில் சாகசம் நிகழ்த்தி பல பரிசுகளைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த வருடம் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மாறி கணேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இன்று அவரது முதலாம் ஆண்டு நினைவு என்பதால் மாரிகணேஷின் தந்தை முருகேசன் ஆறு லட்சம் ரூபாய் செலவு செய்து தனது மகனை தத்ரூபமான மெழுகு சிலையாக வடிவமைத்து செம்பூரணி சாலையில் அமைந்துள்ள தனது திருமண மண்டபத்தில் வைத்துள்ளார். மதன் மீது தந்தைக்கு இருக்கும் பாசத்தை பார்த்து பலரும் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |