Categories
Uncategorized சினிமா தமிழ் சினிமா

தளபதி 65 இயக்குவது யார் ? … கதைக் கேட்ட விஜய்…. கசிந்த தகவல் … எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

நடிகர் விஜயின் 65 -வது திரைப்படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி விஜயின் நடிப்பில் உருவாக்கியுள்ள மாஸ்டர் திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. இது விஜயின் 64-வது படமாகும். இதை தொடர்ந்து தளபதியின் 65 -வது திரைப்படத்தை இயக்குவது யார்? என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தை இயக்கவிருந்த நிலையில் சம்பள பிரச்சினையால்  படத்திலிருந்து விலகிவிட்டார். இதன்பின் இப்படத்தை மகிழ்திருமேனி, பேரரசு ,மோகன்ராஜா, ஹரி ஆகியோர் இயக்க வாய்ப்புகள்  இருப்பதாக கூறப்பட்டது .

பிரபல இயக்குனர் நெல்சன் கூறிய கதையும் விஜய்யை கவர்ந்ததாக கூறப்படுகிறது  . இந்நிலையில் நடிகர் விஜய் இயக்குனர் எஸ் .ஜே. சூர்யாவிடம் கதை கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான திரைப்படம் ‘குஷி’ மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. எனவே எஸ். ஜே. சூர்யாவின் இயக்கத்தில் விஜய் நடிப்பாரா ? என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |