Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விருதுநகரில் வீட்டில் புகுந்து….. ”கை, கால்களை கட்டி போட்டு”…. கொள்ளையர்கள் அட்டகாசம் …!!

சிவகாசியில் வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு 40 பவுன் நகை மற்றும் 1 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து:

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், திருவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் உள்ளது அண்ணாமலையார் காலனி. இங்கு சிவகாசியில் அச்சகம் நடத்தும் நந்தகுமார், இவரது மனைவி சித்ராதேவி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இன்று காலை நந்தகுமாரின் வீட்டின் முன் கதவை உடைத்துக் கொண்டு, மர்ம கும்பல் வீட்டுக்குள் புகுந்தது. அங்கு தூங்கிக் கொண்டிருந்த நந்தகுமார், அவரது மனைவி, மகன்களை போர்வையால் மூடி கட்டிப்போட்டு விட்டு, பீரோவில் இருந்த 40 பவுன் நகைகள், 1 லட்சம் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றனர்.

பின்னர் நந்தகுமாரின் மகன் போராடி, கட்டியிருந்த போர்வையை அவிழ்த்து, மற்றவர்களையும் விடுவித்தார். சம்பவம் குறித்து சிவகாசி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் நேரில் வந்து விசாரணை நடத்தினார். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டது. வீட்டின் வெளியே இருந்த 4 கண்காணிப்பு கேமராக்களும் செயல்படாமல் இருந்ததால், குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் சிவகாசி பகுதி பொதுமக்களிடம் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி நகர் போலீசார் குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |