தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என்று தமிழக அரசு அறிவித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்று யுஜிசி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் தேர்வு நடத்த முடியாத சூழல் உருவாகியது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு அரியர் வைத்துள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்தது. மேலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் உள்ள மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனையடுத்து அரிய தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என்றும், கட்டாயம் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் யுஜிசி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கல்லூரி மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என்று தமிழக அரசு அறிவித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அரிய தேர்வுகள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.