ஈரோட்டில் கந்துவட்டி கொடுமையால், ஜவுளி தொழிலாளி ஸ்ரீதர் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் , பழைய பாளையத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் ஈரோட்டில் ஜவுளி தொழில் செய்து வருகிறார். ஆறு மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்திடம் நாற்பதாயிரம் ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
மொத்தம் வட்டித்தொகையாக 60 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் .இவர் 30 ஆயிரம் ரூபாயை முதலில் செலுத்திவிட்டார் .பின்னர் மீதமுள்ள பணத்தையும் உடனடியாக செலுத்துமாறு நிதி நிறுவனம் மிரட்டியதால் மனமுடைந்த ஸ்ரீதர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.இதனால் ஸ்ரீதரின் உறவினர்கள் கந்துவட்டி கும்பலை கைது செய்ய கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் போலீசார் அளித்த நம்பிக்கையின் பேரில் ஸ்ரீதரின் உடலை வாங்கிச்சென்றனர் .