அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை அணியில் தோனி விளையாடினால் 15 கோடி இழப்பு ஏற்படும் என கிரிக்கெட் விமர்சகர் தெரிவித்துள்ளார்
அடுத்த வருடத்திற்கான ஐபிஎல் தொடர் மார்ச் முதல் மே மாதத்திற்குள் நடத்தப்படும் என பிசிசிஐ தலைவரான கங்குலி உறுதி செய்துள்ளார். இந்நிலையில் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எதிர்காலத்தில் விளையாடாமல் அவரை கழட்டி விட வேண்டும் என கிரிக்கெட் விமர்சகரும் இந்திய அணியின் முன்னாள் வீரருமான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் “2021 ஐபிஎல் தொடருக்காக நடக்க இருக்கும் ஏலத்தில் தோனியை சென்னை அணி தக்க வைத்துக் கொள்ளக் கூடாது.
அவ்வாறு அவர்கள் தோனியை வைத்துக்கொண்டால் அவர் 3 சீசன்கள் விளையாடுவாரா என்பது உறுதியாக கூறமுடியாது. 2021 அவர் விளையாடுவது உறுதி ஆனாலும் அதற்கு அடுத்த சீசன்களை தோனி விளையாடுவது சந்தேகமான ஒன்று. இதனால் 15 கோடிகளை சென்னை அணி இழப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இதனால் கவனம் தேவை” என தெரிவித்துள்ளார். நடந்த முடிந்த ஐபிஎல் சீசனில் எதிர்பார்த்த அளவு தோனி ரன் எடுக்கவில்லை.
ஐபிஎல் வரலாற்றில் தோனி எடுத்த குறைந்த ரன்கள் என்றால் அது இந்த ஐபிஎல் சீசனில் எடுத்த 20 ரன்கள் தான். மிகவும் மோசமான தோல்விகளை தான் சென்னை அணியும் சந்தித்தது இதனால் மீண்டும் தோனி ஐபிஎல் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் சென்னை அணி நிர்வாகமும் தோனியும் 2021 சீசனில் அவர் விளையாடுவார் என உறுதியாக கூறியது. எனவே அடுத்த வருடம் தோனி ஐபிஎல் சீசனில் சென்னை அணிக்காக விளையாடுவதில் மாற்றமில்லை.