Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு வரும் சளிக்கு உடனடி தீர்வு…!!!

குழந்தைகளுக்கு ஏற்படும் சளிக்கு வீட்டிலேயே எளிமையான முறையில் மருந்து செய்யலாம்.

உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் தினமும் சளியால் அவதிப்பட்டால், அவர்களுக்கு தினமும் மாலை நேரத்தில் இருட்டு வதற்கு முன்பு இஞ்சி சாறினை கொடுக்க வேண்டும். அதனை குடிப்பதன் மூலம் சளி வாந்தி மூலமாகவோ, மலம் மூலமாகவே வெளியேறிவிடும். இந்த சாரினை இரண்டு வயதிலிருந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

இஞ்சி சாறு தயாரிக்கும் முறை;

ஒரு துண்டு இஞ்சியை நன்கு கழுவி தோல் சீவி மிக்ஸியில் அடிக்கவும். அதில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும். அதன் பிறகு அதனை வடிகட்டி சிறிது நேரம் பாத்திரத்தில் வைக்கவும். 5 நிமிடம் கழித்து பார்க்கும் போது பாத்திரத்தின் அடியில் வெள்ளை நிறத்தில் சாறு படிந்து இருக்கும்.

மேலுள்ள சாற்றினை மட்டும் பயன்படுத்த வேண்டும். வெள்ளை நிறத்தில் படிந்திருப்பது நஞ்சு. அதனைப் பயன்படுத்த கூடாது. பிரித்தெடுத்த சாற்றில் சிறிது தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கவும். அதனை குழந்தைகளுக்கு வாரம் இரண்டு முதல் மூன்று முறை கொடுக்கலாம்.

Categories

Tech |