.
திண்டுக்கல்லில், தக்காளி இறக்குமதி குறைந்ததால் ஒரு கிலோ ரூ.36க்கு விற்பனையாகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் , நத்தம், ஒட்டன்சத்திரம், பழநி, வத்தலக்குண்டு பகுதிகளில் 1,800 ஹெக்டேர் நிலப்பரப்பில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. அங்கிருந்து மதுரை, சேலம், கேரளா, ஆந்திராவுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஆனால் சமீபகாலமாக ,வெயிலின் காரணமாக தக்காளி சாகுபடியும் பாதிக்கப்பட்டுள்ளதால் சாகுபடி குறைந்து வருகிறது.மேலும் கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.28 க்கும் ,நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.30 க்கும் விற்றது. மேலும் நேற்று கிலோவுக்கு ரூ.6 அதிகரித்து ரூ.36 க்கு விற்கப்படுகிறது .