அசாம் மாநிலத்தில் தங்க புதையலுக்கு ஆசைப்பட்ட குழந்தைகளை பலி கொடுக்கத் துணிந்த சகோதரர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
அசாம் மாநிலத்தில் கவுகாத்தி என்ற நகரில் திருந்து கிழக்கே அமைந்துள்ள ஒரு கிராமத்தில் ஜமியூர் உசைன் மற்றும் சரிபுல் உசைன் என்ற இரு சகோதரர்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் இருவருக்கும் மூன்று குழந்தைகள் இருக்கின்றன. கடந்த சில நாட்களாக அவர்களின் நடவடிக்கையில் சில மாற்றம் ஏற்பட்டதால், சந்தேகம் அடைந்த கிராம மக்கள் போலீசில் தகவல் அளித்துள்ளனர். தகவலின்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த சகோதரர்களிடம் பெஜ் என்ற மந்திரவாதி ஒருவர், உங்களுடைய குழந்தைகளை பலி கொடுத்தால், உங்கள் வீட்டில் உள்ள மாமரத்தின் கீழ் மறைந்துள்ள தங்க புதையல் உங்களுக்கு கிடைக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
அதனை நம்பிய சகோதரர்கள் தங்களின் குழந்தைகளை வீட்டில் அடைத்து வைத்துள்ளனர். அதனை அறிந்த கிராம மக்கள் சகோதரர்கள் இரண்டு பேரையும், அவர்களின் மனைவிகள் மற்றும் குழந்தைகளையும் போலீசில் ஒப்படைத்தார்கள். அதன்பிறகு போலீசார் அந்த இரண்டு நபர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மந்திரவாதியை பிடித்து விசாரணை செய்தால் உண்மை தெரிய வரும் என்பதால், போலீசார் மந்திரவாதியை தீவிரமாக தேடி வருகிறார்கள்.