குறிப்பிட்ட சில கல்லூரிகளில் மட்டும் படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வு கிடையாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் மருத்துவ படிப்பு படிப்பதற்கு நீட் தேர்வை நுழைவுத்தேர்வாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து வருடந்தோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வினை எழுதி வருகிறார்கள். தற்போது கூட நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு முறையில் குறிப்பிட்ட கல்லூரிகள் சிலவற்றுக்கு மட்டும் மத்திய அரசு விலக்கு அறிவித்துள்ளது.
எய்ம்ஸ்,ஜிப்மர் உள்ளிட்ட மத்திய அரசின் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு நீட் முதுநிலை தேர்வுகளில் (PG Courses MD, MS , DM (6 Years ), MCH (6 Years), MDS) இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரிகளில் சேர நீட் தேர்வுக்கு பதிலாக “இனி-செட்(INI -SET )” என்னும் தனி நுழைவுத் தேர்வை எய்ம்ஸ் நடத்தும்.