தமிழகத்தில் மழைக்காலங்களில் பயணிகள் அனைவரும் பேருந்து குடை பிடிப்பது பற்றி கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மழை காலத்தில் தமிழகத்தில் இருக்கும் பேருந்துகள் மோசமாக ஒழுகுவதை மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “தமிழக அரசு புதிய பேருந்துகளை இயக்கி வருகிறது.
அதில் மழை பெய்ததும் உள்ளே ஒழுகுவதால் பயணிகள் அனைவரும் குடையைப் பிடித்துக்கொண்டு பேருந்தில் அமர்ந்து பயணிக்கிறார்கள். பேருந்தின் உள்ளே ஒழுகியது மழைநீரா? ஊழலா?. பயணிகள் பிடித்தது குடையா?, ஆளும் கட்சிக்கான கருப்புக் கொடியா?, உங்கள் ஊர்களில் பேருந்து எப்படி இருக்கு மக்களே சொல்லுங்கள்?” என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.