தமிழகத்தில் தொடர் கனமழையால் பெரும் பாதிப்பு ஏற்படலாம் என்று மாநில பேரிடர் மீட்பு படை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் தொடர் கனமழையால் பெரும் பாதிப்பு ஏற்படலாம் என்று மாநில பேரிடர் மீட்பு படை எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் ஒரு வாரத்திற்குத் தேவையான மெழுகுவர்த்திகள், தீப்பெட்டிகள், எரிவாயு, மருந்து, டார்ச் மற்றும் பேட்டரிகளை போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளது.
அது மட்டுமன்றி பொதுமக்கள் ஏதாவது பாதிப்பு இருந்தால் 9445086080 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.