கொரோனாவை தடுக்க தடுப்பூசி மட்டும் போதாது என உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்
உலகம் முழுவதிலும் கொரோனா தொற்றினால் 54 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளனர். இதுகுறித்து உலக சுகாதார இயக்குனர் பேசியபோது, “தடுப்பு மருந்து தற்போது இருக்கும் மருந்துகளை பூர்த்திசெய்ய தான் கண்டுபிடிக்க படுகிறதே தவிர அவற்றுக்கு மாற்றாக அல்ல. அதோடு தடுப்பு மருந்து மட்டுமே தொற்றை தடுக்க போதுமானதாக இருக்காது.
சில கட்டுப்பாடுகளுடன் தான் தடுப்பு மருந்து வரும். வயதானவர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் முதலில் தடுப்பு மருந்து செலுத்தப்படும். இதனால் இறப்பு விகிதம் குறையும். அதேநேரம் தொற்று பரவுவதற்கான வாய்ப்பும் உள்ளது. எனவே பரிசோதனைகளை அதிகரிக்கவேண்டும். தனிமைப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு போன்றவையும் மிக மிக அவசியம் என எச்சரித்துள்ளார்.