Categories
உலக செய்திகள்

மக்களே…! விட்டுறாதீங்க, ரொம்ப முக்கியம்… உலகிற்க்கு எச்சரிக்கை விடுத்த ஆய்வாளர்…!!

கொரோனா தடுப்பு மருந்து புழக்கத்திற்கு வந்தாலும் மக்கள் முகக்கவசம் அணிவதை தவிர்க்க கூடாது என்று தோற்று நோய் வல்லுநர் தெரிவித்துள்ளார்.

உலகமெங்கும் மிகப்பெரிய தொற்று நோய் பரவலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் கடந்த சில மாதங்களாக குறைந்திருந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில வாரங்களாக அமெரிக்காவிலும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தையும் தாண்டியுள்ளது. இந்நிலையில் மூன்றாம் கட்ட பரிசோதனையில் பைசர் மற்றும் மாடர்னா நிறுவனம் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்புமருந்து 90 விழுக்காட்டிற்கு மேல் பலனளிப்பதாக அறிவித்துள்ளன.

இதையடுத்து  மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனை முழுமையாக முடிந்த பிறகு இந்த தடுப்பூசி மக்களுக்கு போட தயாராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மக்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். இருப்பினும் கொரோனா தடுப்பூசி உலகத்திற்கு வந்தாலும் கூட மக்கள் எப்பொழுதும் மாஸ் அணிவதை தவிர்க்க கூடாது என்று அமெரிக்க தொற்றுநோய் வல்லுனர் அந்தோணி பவுசி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் பிரபல செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “மக்களுக்கு 90% மேல் பலன் அளிக்கும் இந்த தடுப்பூசி குறித்த செய்தியால்  நம்பிக்கை வருவது இயல்பான ஒன்றுதான். மேலும் ஒருவர் தன்னுடைய உடலில் தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டால் சுகாதார வழிமுறைகளை கைவிடலாம் என்றில்லை. ஏனென்றால் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் இந்த தடுப்பு மருந்து 90 – 95 சதவீதம் மட்டுமே வேலை செய்யும், அதுவும் உங்களுடைய உடலில் வேலை செய்யுமா என்பது நமக்கு கண்டிப்பாக தெரியாது.

எனவே மக்கள் சில காலம் முக கவசங்களை அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிப்பது தான் உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். தடுப்பு மருந்து புழக்கத்தில் இருந்தாலும் கூட உடனே பழைய நிலையை அடையாமல் படிப்படியாக செல்ல வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |