Categories
தேசிய செய்திகள்

வேறொரு பெண்ணுடன் கல்யாண ஆசை…. காதலியை உயிருடன் எரித்து கொன்ற கொடூரன்…. மனதை உலுக்கும் சம்பவம்….!!

இந்தியாவில் நாளுக்கு நாள் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிரான குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. நாடு முழுவதும் மனதை உலுக்கும் விதமான பல சம்பவங்களை நாம் அடிக்கடி காண நேரிடுகிறோம்.  இந்த வரிசையில், மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் 22 வயது இளம்பெண் ஒருவர் ஆசிட் மற்றும் தீக்காயங்களுடன் கல் குவாரி ஒன்றில் உயிருக்கு போராடியபடி கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து காவல்நிலையத்தில்  தகவல் தெரிவிக்க,

அவர்கள் அப்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். பின் இது குறித்து வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில்,

அந்தப் பெண் அவினாஷ் என்பவரை காதலித்து வந்ததாகவும், அவர் தற்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய இருந்ததால், இந்தப் பெண்ணை கொலை செய்ய நினைத்து தனியாக அழைத்து வந்து ஆசிட்டை ஊற்றி, பின் பெட்ரோலையும்  ஊற்றி கொளுத்தி விட்டு சென்றதாக தெரியவந்துள்ளது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Categories

Tech |