முட்டை கறி செய்ய தேவையான பொருள்கள் :
முட்டை -4
தேங்காய் துருவல் – ஒரு கப்
மஞ்சள், மல்லி, சீரக, மிளகாய் பொடி – தலா ஒரு தேக்கரண்டி
புளி தண்ணீர் – 2 கப்
எண்ணெய் – தாளிக்க
உப்பு – தேவைக்கேற்ப
வரமிளகாய் – 2
பூண்டு – 6 பல்
கறிவேப்பிலை – 10 இதழ்
சீரகம் -ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 3
தனியா விதை – அரை தேக்கரண்டி
வெந்தயம் – அரை தேக்கரண்டி
பெரிய வெங்காயம் – சிறிது
முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். புளியை ஊற வைத்து, முட்டையை வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, வரமிளகாய், சீரகத்தை சேர்த்து தாளிக்கவும்.
அதன் பின் ஒன்றன் பின் ஒன்றாக தாளிக்க வேண்டிய பொருட்களை போட்டு கடைசியாக வெங்காயம் சேர்த்து பொன்னிறமானதும், தேங்காய் துருவல் சேர்க்கவும். பின் மஞ்சள் பொடி, உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு பிரட்டவும்
பின்பு 5 நிமிடம் கழித்து பொடி வகைகளை சேர்த்து, தண்ணீர் தெளித்து 5 நிமிடம் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். பின் புளி தண்ணீரை சேர்த்து ஒன்று சேர பிரட்டி, மூடி பத்து நிமிடம் அப்படியே வைக்கவும்.
அடுத்தது முட்டையை கீறி எண்ணெய் பிரிந்து வந்த கறியில் சேர்த்து கிளறவும். சுவையான முட்டை கறி தயார்.