புத்தாண்டில் செல்போன் கட்டணங்கள் உயர்த்தப்படும் என்று வெளியாகியுள்ள தகவலால் செல்போன் பயனாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
புத்தாண்டில் செல்போன் கட்டணங்கள் மேலும் அதிகரிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஜியோவின் அதிரடி விலை குறைப்பால் செல்போன் நிறுவனங்கள் அனைத்தும் பெரும் சரிவை சந்தித்துள்ளன.
அந்த இழப்பை ஈடுகட்டுவதற்காக 15 முதல் 20 சதவீதம் வரை வரும் ஆண்டின் துவக்கத்தில் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதுமட்டுமன்றி ஜியோ நிறுவனமும் செல்போன் கட்டண உயர்வை உயர்த்த உள்ளது.