பிரபல தமிழ் நடிகரான விஜய் அவர்களின் மாஸ்டர் திரைப்படத்திற்கான டீசர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான நிலையில், குறுகிய அளவில் அதிக பார்வையாளர்களை பெற்று, உலக அளவில் சாதனை படைத்துள்ளது. இது நம் தமிழ் மக்களுக்கு பெரிய அளவில் மகிழ்ச்சியை கொடுக்கக் கூடிய ஒரு விஷயமாக பார்க்கப்பட்டு வரும் சூழ்நிலையில்,
இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், சாய்பல்லவி உள்ளிட்டோர் நடித்த மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் நூறு கோடி பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. இசையமைப்பாளர் யுவன் இசையமைத்த இந்த பாடல் வெளியானது முதலே மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது.
இந்நிலையில் தற்போது இந்த பாடல் நூறு கோடி பார்வையாளர்களை தாண்டி பார்க்கப்பட்டு வருகிறது. இது குறித்து நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், 3 படத்தில் இடம்பெற்ற கொலவெறி பாடலின் 9th ஆனிவர்சரி தினமான இன்றைய தினம் ரவுடி பேபி பாடல் 1 பில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது உற்சாகம் அளிக்க கூடிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த பாடலுக்காக உழைத்த படக்குழுவினர் அனைவருக்கும், ரசிகர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.