Categories
தேசிய செய்திகள்

உ.பி முதல்வரை உருக வைத்த 9 வயது சிறுமி… நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்…!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் போலீசார் இழுத்துச் சென்ற தனது தந்தையை காப்பாற்ற சிறுமி செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க கூடாது என்று பல்வேறு மாநில அரசுகள் தடை விதித்திருந்தன. அவ்வாறு தடையை மீறி பட்டாசு வெடmடித்தவர்களையும், விற்றவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். அதன்படி உத்திரப்பிரதேச மாநிலத்தில் தடையை மீறி பட்டாசு விற்றதால் ஒரு நபரை போலீசார் கைது செய்து இழுத்து சென்றனர். அதனைக் கண்ட அந்த நபரின் மகள், போலீசால் இழுத்துச் செல்லப்பட்ட தனது தந்தையை காப்பாற்ற, போலீஸ் ஜீப்பின் தலையை முட்டிக் கொண்டு கதறி அழுத சிறுமியின் நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

அந்த வீடியோவை பார்த்த உத்திரபிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத், உடனடியாக அந்த குழந்தையின் அப்பாவை விடுவிக்க வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டார். அதன்பிறகு தந்தையுடன் வீட்டிற்கு வந்த போலீசார், அந்த சிறுமிக்கு நிறைய கிப்ட் பொருட்களையும் கொடுத்து வாழ்த்து தெரிவித்து சென்றார்கள்.

Categories

Tech |