சாலையில் சென்று கொண்டிருந்த வாகனம் நிலை தடுமாறி நீரோடையில் விழுந்ததால் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இமாச்சல பிரதேச மாநிலத்தில் மாண்டி மாண்டி மாவட்டம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு வாகனம், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தை உடைத்து கொண்டு நீரோடையில் கவிழ்ந்தது. அந்த நீரோடை முழுவதும் பாறைகள் நிறைந்ததால், வாகனம் மிகவும் சேதம் அடைந்தது. வாகனத்தில் இருந்தவர்கள் அனைவரும் தூக்கி வீசப்பட்டு பாறைகள் மீது விழுந்தனர். இந்த கோர விபத்து இன்று அதிகாலை 3 மணியளவில் நிகழ்ந்துள்ளது.
இது பற்றி அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உயிரிழந்த 7 பேரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த விபத்தில் ஒருவர் மட்டும் உயிர்தப்பி பலத்த காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் பற்றி போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மழை அதிகமாக பெய்தால் பிரேக் பிடிக்காமல் இந்த கொடூர விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.