Categories
மாநில செய்திகள்

2021 ஜூலை வரை பள்ளிகள்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு நடப்பாண்டின் இறுதி தேர்வு ஜூலை மாதம் நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் அனைத்து பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் நவம்பர் 16ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார். ஆனால் அதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், பெற்றோர்கள் கூறிய கருத்தை அடிப்படையாகக் கொண்டு பள்ளிகள் திறப்பு தேதியை ரத்து செய்து முதலமைச்சர் அறிவித்தார்.

இந்நிலையில் 2020-2021 ஆம் கல்வியாண்டுக்கான காலகட்டத்தை ஜூலை மாதம் வரையில் நீட்டிப்பதற்கு பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி ஏப்ரலில் தேர்வு நடத்தி முடிப்பதற்கு பதிலாக ஜூலையில் தேர்வுகளை நடத்துவதற்கு ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Categories

Tech |