Categories
உலக செய்திகள்

சமூக விரோத கூட்டம்…. மகளை பிணையக் கைதியாக அனுப்பிய அதிகாரி… பின் நடந்த அதிரடி சம்பவம்…!!

தான் பெற்ற மகளை பணயம் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த கும்பலை பிடித்த காவல் அதிகாரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

பாகிஸ்தானில் உள்ள சிந்துவை சேர்ந்த ரபீக் என்பவர் தலைமையிலான சமூக விரோதக் கூட்டம் செயல்பட்டு வருகின்றது. இந்த கூட்டம் கராச்சியை சேர்ந்த தாய் மற்றும் அவரது 5 வயது மகளை வேலை கொடுப்பதாக கூறி அழைத்துச் சென்றனர். அதன் பிறகு பல மாதங்களாக தாயை பாலியல் வன்கொடுமை செய்து கொடுமை படுத்தி வந்துள்ளனர்.

பின்னர் அவரது 5 வயது மகளை பிணையக் கைதியாக பிடித்து வைத்துக் கொண்டு வேறு ஒரு பெண்ணை அழைத்து வருமாறு அனுப்பியுள்ளனர். அந்த தாய் புயிரோ என்ற காவல் அதிகாரியிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். முழுவதையும் கேட்டறிந்த புயிரோ தனது மகளை அந்தத் தாய் உடன் அனுப்பி வைத்தார்.

அதன் பிறகு அந்தக் கூட்டத்தை கண்டறிந்து துப்பாக்கிச்சூடு நடத்தி பெண்களை மீட்டார். இதனைத் தொடர்ந்து காவல் அதிகாரியான புயிரோ மற்றும் துணிச்சல் மிக்க அவரது மகள் என இருவரையும் சிந்து அரசு பாராட்டியுள்ளது. மேலும் காவல் அதிகாரிக்கு காயிதே-இ-ஆசாம் போலீஸ் பதக்கத்தையும் அவரது மகளுக்கு சிவில் விருதையும் கொடுப்பதற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |