Categories
தேசிய செய்திகள்

போட்டு கொடுத்தால் போதும்….. “ரூ1000 ரொக்க பரிசு” மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!

ஒடிசா மாநிலத்தில் சமூக சேவை செய்வோருக்கு ரூபாய் 1000 பரிசு தொகை  வழங்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 

இன்றைய காலகட்டத்தில் குழந்தை பாக்கியம் என்பதே பலருக்கு பொக்கிஷமாக கருதப்படும் சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையிலும், இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில், பெண் சிசு கருவில் கண்டறியப்பட்டால் அதை கலைக்க விரும்பும் கும்பல்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். பெண் சிசுக்கள் கருவிலேயே அழிக்கப்படுவதை தடுக்க கருவில் இருக்கும் குழந்தை ஆணா ? பெண்ணா ? என்று அறியும் பரிசோதனைக்கு  தடை இருந்தாலும், ரகசியமாக இந்தியாவின் பல பகுதிகளில் இது செய்யப்படுகிறது.

இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் கன்ஜம் மாவட்டத்தில் இதுபோன்ற சட்ட விரோதமான பரிசோதனைகள் நடைபெறுவதாக தகவல் அளிப்போருக்கு ரூபாய் ஆயிரம் பரிசாக  வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. பிரச்சனை எங்கு நடந்தால் என்ன ? நமக்கு எதற்கு வம்பு என்று மக்கள் செல்லாமல் இதுபோன்ற சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என்பதற்காக சன்மானங்கள் அளிப்பது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

Categories

Tech |