ஆயிரம் பேரிடம் நிலமோசடி செய்த புகார் தொடர்பாக நடிகர் விஜய் மீது புதிய குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பாக பிரபல நடிகர் விஜய் அவர்களின் தந்தை சந்திரசேகர் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் புதிய கட்சியைத் ரிஜிஸ்டர் செய்தார். இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் தனக்கும், அந்த கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அறிவிப்பு ஒன்றையும் உடனடியாக வெளியிட்டார். அந்த அறிவிப்பு வெளியானது முதலே, பல்வேறு சர்ச்சை சம்பவங்கள் தொடர்ந்து விஜய் தொடர்பாக அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் ஆரம்பித்த புதிய கட்சியின் தலைவர் பத்மநாபன் மீது விஜய் ரசிகர் மன்ற உறுப்பினர் ரவி சங்கர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆயிரம் பேரிடம் நிலம் வாங்கி தருவதாக மோசடி செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தந்தை மீது நடிகர் விஜய்யின் பழிவாங்கும் நடவடிக்கை என பத்மநாபன் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இச்சம்பவம் விஜய் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.