Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“கள்ளத்தனமாக சாராயம் விற்ற பெண் கைது “கடலூரில் பரபரப்பு !!…

கடலூர் மாவட்டம் ,வண்டிப்பாளையம் பகுதியில் கள்ளத்தனமாக சாராயம் விற்ற பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையம் பகுதி அருகே காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர் .அப்பொழுது அப்பகுதியில் சாராயம் கள்ளதனமாக விற்கப்படுவதாக தகவல் வெளியானதை அடுத்து காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர் சோதனையில் டிராக்டர் குழாயில் சுமார் 1500 லிட்டர் சாராயம் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது இது குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில் சாராயத்தை விற்று வந்தவர் அப்பகுதியை சேர்ந்த சுந்தரி என்பது தெரியவந்தது

அதன்பின் காவல்துறையினர் அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட பொழுது அவர் மீது 15 சாராய வழக்கு கடலூர் காவல் நிலையத்தில் உள்ளது தெரிய வந்து அதன்பின் அவரது குற்றத்தை குறைக்க வேண்டும் என்ற நோக்கில் அவருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் முடிவு செய்து தடுப்பு காவல் பிரிவின்படி ஓராண்டு கடுங்காவல்  தண்டனை அளிக்கப்பட்டது அதன் பின் கைது செய்யப்பட்ட அவர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் .

Categories

Tech |