Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மனைவிக்கு கேன்சர் நோய்…. தாங்கிக்க முடியாத கணவர்… இறுதியில் இருவரும் எடுத்த முடிவு…!!

கணவன் மற்றும் மனைவி இருவரும் ஒரே நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவத்தால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் கிராப்பட்டியிலுள்ள சின்கோ காலனி 2வது தெருவில் வசிக்கும் தம்பதிகள் மோகன்தாஸ்(70)-சுமதி(64). மோகனதாஸ் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து ஓய்வு பெற்று வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் தீபாவளியன்று இத்தம்பதியினர் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளனர். சந்தோசமாக தீபாவளியை கொண்டாடி விட்டு அவர்கள் வீட்டிற்குள் சென்று தூங்க சென்று விட்ட நிலையில் காலை வெகுநேரமாகியும் வீடு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அவருடைய மகன் பாலாஜி கதவை திறக்க முயற்சித்துள்ளார்.

ஆனால் கதவு திறக்காததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் தனது அப்பா மற்றும் அம்மா சடலமாக விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கூறியதால் அவர்கள் விரைந்து வந்து இருவரின் உடலையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் வீட்டை சோதனையிட்ட போது அங்கு கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அதில், “எங்களது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை. எங்களுக்கு வாழ பிடிக்காமல் தற்கொலை செய்துகொண்டோம். மேலும் என்னுடைய மகன், மருமகள் மற்றும் பேத்தியை விட்டு செல்வதற்கு தான் எங்களுக்கு மிகவும் கவலையாக இருக்கிறது. அவர்கள் எங்களை காப்பாற்ற நிறைய பணம் செலவு செய்தார்கள்”என்று எழுதியுள்ளனர். இதையடுத்து நடத்தப்பட்ட காவல்துறையினரின்  முதற்கட்ட விசாரணையில் சுமதிக்கு கேன்சர் இருந்ததால் பல நாட்களாகவே கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளார்.

இதனால்  தன் மனைவி படும் வலியை தாங்கிக் கொள்ள முடியாத மோகன்தாஸ் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளதால் இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.

Categories

Tech |