தளபதி விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் தீபாவளிக்கு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய்சேதுபதி இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படத்தில் மாளவிகா மோகன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தீபாவளியை முன்னிட்டு தீபாவளி அன்று மாலை 6 மணிக்கு மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. டீசர் வெளியான 24 மணி நேரத்தில் 2 கோடி பேரால் பார்க்கப்பட்டுள்ளது. மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே மிகச்சிறந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. இதை தமிழ் சினிமாவின் பெரும் சாதனையாக விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.