Categories
மாநில செய்திகள்

திட்டமிட்டபடி வேல் யாத்திரை தொடங்கும்… முதலமைச்சருடன் பாஜக தலைவர் சந்திப்பு…!!!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பாஜக தலைவர் முருகன் நேரில் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் பாஜக சார்பாக வேல் யாத்திரை நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. இதனையடுத்து திருத்தணி, திருவொற்றியூர் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் யாத்திரை நடத்த முயன்ற பாஜக தலைவர் முருகன் உள்ளிட்ட பாஜக தொண்டர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் பாஜக தலைவர் எல். முருகன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “வருகின்ற 17ஆம் தேதி முதல் திட்டமிட்டபடி கட்டாயம் வேல் யாத்திரை தொடங்கும்.

அதில் மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள்” என்று அவர் கூறியுள்ளார். இதனையடுத்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் முதலமைச்சர் இல்லத்தில் இன்று மாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாஜக தலைவர் முருகன் நேரில் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |