Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு… வெளியான முக்கிய அறிவிப்பு… மாணவர்கள் ஆர்வம்…!!!

தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு கூட்டம் விரைவில் தொடங்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது, “தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் 50 லட்சம் நோயாளிகளுக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் 108 ஆம்புலன்ஸ் கான ஆண்ட்ராய்டு செயலி வெளியிடப்படும். தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்விற்கு 34,424 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மருத்துவ விண்ணப்ப பதிவு இன்றுடன் முடிவடைகிறது. இதனையடுத்து மொத்தம் 4,061 இடங்களுக்கு கவுன்சிலின் நடத்தப்பட உள்ளது.

அரசுப்பள்ளி மாணவர்கள் 304 பேருக்கு குறையாமல் இடம் கிடைக்கும். பிடிஎஸ் மாணவர்கள் 91 பேருக்கு இடம் கிடைக்கும். அரசின் உள் இட ஒதுக்கீடு மூலம் ஆக மொத்தம் 395 பேருக்கு மருத்துவ படிப்புக்கான இடம் கிடைக்கும். அதற்கான தரவரிசைப் பட்டியல் வருகின்ற 16ஆம் தேதி வெளியிடப்படும். அதன்பிறகு 18 அல்லது 19ஆம் தேதிகளில் கலந்தாய்வு நடைபெறும். அதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும். கலந்தாய்வுக் கூட்டம் நேரடியாகவே நடைபெறும்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |