அமெரிக்க வெளியுறவு செயலாளர் ட்ரம்ப் மீண்டும் அதிபராக பதவி ஏற்பார் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த மூன்றாம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் ஜோ பைடன் 290 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார் . ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்பு விழா நடக்கவிருக்கும் நிலையில் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவி ஏற்பார் என அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மைக் பொம்பியோ கூறியுள்ளார்.
அவர் கூறியபோது “ட்ரம்பின் இரண்டாவது ஆட்சி மிக சுமுகமாக நடக்கும். தேர்தலில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை உலகம் முழுவதும் பார்த்துக்கொண்டிருக்கிறது. அனைத்து வாக்குகளையும் முழுமையாக என்ன இருக்கிறோம். வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு யார் வெற்றியாளர் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
அனைத்திற்குமே முறை என்று ஒன்று உள்ளது. இதனை அரசியல் அமைப்பு சட்டமும் தெளிவாக எடுத்துரைக்கிறது” எனக் கூறியிருக்கிறார். தான் வெற்றி பெற்று விட்டதாக ட்ரம்ப் கூறிக் கொண்டு தேர்தல் முடிவை எதிர்த்து நீதிமன்றத்திற்கு செல்ல இருப்பதாக மிரட்டல் விடுத்து வருகிறார். இந்நிலையில் ட்ரம்ப் மீண்டும் அதிபராக பதவி ஏற்பார் என மூத்த அதிகாரிகளில் ஒருவரான மைக் பாம்பியோ கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.